nayantara vignesh shivan marriage june9

Advertisment

போடா போடி'படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான விக்னேஷ் சிவன் அடுத்ததாக விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான நானும் ரௌடிதான் படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தை தொடர்ந்துஇயக்குநர் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் காதலிப்பதாக தகவல் வெளியான நிலையில், இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இத்தகவலை உறுதி செய்தனர். 6 வருடங்களாக காதலித்து வந்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவருக்கும் கடந்த ஆண்டே நிச்சயதார்த்தம் நடந்ததாகநயன்தாராவேஒரு போட்டியில் கூறியிருந்தார். இதையடுத்து ரசிகர்கள் இவர்களதுதிருமணம் குறித்த கேள்விகளை தொடர்ந்து எழுப்பி வந்தனர்.

இந்நிலையில் அவர்கள் திருமண தேதி குறித்ததகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படிவிக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவருக்கும் ஜூன் 9ஆம்தேதி சென்னை மகாபலிபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற உள்ளதாகக்கூறப்படுகிறது. முதலில் இவர்கள்திருமணத்தை திருப்பதி கோவிலில் நடத்ததிட்டமிட்டிருந்தனர். ஆனால் திருமண விழாவிற்கு 150 க்கு மேற்பட்ட விருந்தினர்கள் வரவுள்ளதால், கோவில் நிர்வாகம் அனுமதி மறுத்துவிட்டது. இதனைதொடர்ந்து திருமணத்திற்காகவிக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடிகள் மகாபலிபுரத்தை தேர்வு செய்துள்ளதாகவும், இந்ததிருமண நிகழ்வை பிரபல ஓடிடி தளம் நேரடி ஒளிபரப்பு செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.