piru lake

கடந்த இரு தினங்களுக்கு முன்பு கலிஃபோர்னியாவிலுள்ள பிரு ஏரியில் படகு ஒன்றை வாடகைக்கு எடுத்துக் கொண்டு தனது நான்கு வயது மகனுடன் சவாரி சென்றுள்ளார் நடிகை நயா ரிவெரா.

Advertisment

நயா சவாரிக்குச் சென்ற மூன்று மணிநேரத்திற்குப் பிறகு, ஏரிக்கு நடுவே நயா எடுத்துச் சென்ற படகில் அவரது மகன் ஜோஸி மட்டும் தனியாக உறங்கிக் கொண்டிருந்ததை இன்னொரு படகில் சென்ற ஒருவர் பார்த்துள்ளார். அந்த நபர் ஜோஸியை மீட்டு, போலீஸிடம் ஒப்படைத்துள்ளார்.

Advertisment

இதனைத் தொடர்ந்து ஜோஸியிடம் போலீஸ் விசாரிக்கையில், தன் தாய் நயா தண்ணீரில் நீந்தியதாகவும், அவரால் மீண்டும் படகுக்கு வரமுடியவில்லை என்றும் ஜோஸி கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து போலீஸார் ஏரி முழுவதும் தேடுதல் வேட்டையில் இறங்கினர். ஏரி கார் நிறுத்தம் அருகே நயாவின் கார் நின்றபடியே உள்ளது.

இரண்டு நாட்களாக நயாவை தேடியும் எந்தத் துப்பும் கிடைக்கவில்லை என்பதால் காணாமல் போய்விட்டார் என்று காவல்துறை அறிவித்துள்ளது. தேடுதல் பணி நடந்து கொண்டிருப்பதால் பிரு ஏரியில் படகு சவாரி செய்ய பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisment