Skip to main content

"அதை நான் ஒருபோதும் சொல்லவில்லை" - சர்ச்சை குறித்து டென்ஷனான பேட்ட பட நடிகர்

Published on 26/05/2023 | Edited on 26/05/2023

 

 Nawazuddin Siddiqui tweet goes viral

 

இந்தி சினிமாவில் காமெடி, வில்லன், ஹீரோ மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நவாசுதீன் சித்திக். தமிழில் ரஜினியின் 'பேட்ட' படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து இந்தியில் பல படங்களில் நடித்து வருகிறார். 

 

இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் திடீரென, "பார்வையாளர்களை அதிகரிக்க தவறான செய்திகளைப் பரப்புவதை நிறுத்துங்கள். இது மலிவான டிஆர்பி (TRP). எந்தப் படமும் தடை செய்யப்படுவதை நான் ஒருபோதும் விரும்பவில்லை. அதை நான் ஒருபோதும் சொல்லவும் இல்லை. திரைப்படங்களை தடை செய்வதை நிறுத்துங்கள். பொய்யான செய்திகளை பரப்புவதை நிறுத்துங்கள்" என பதிவிட்டுள்ளார். 

 

நவாசுதீன் சித்திக், எந்த படத்தின் பெயரையும் குறிப்பிடவில்லை. ஆனால் சமீபத்தில் 'தி கேரளா ஸ்டோரி' படம் வெளியான நிலையில் அதை தடை செய்ய வேண்டும் என பல தரப்பிலிருந்தும் போராட்டங்கள் நடைபெற்றன. இது குறித்து இப்படத்தை தடை விதிப்பதற்கு நவாசுதீன் சித்திக் ஆதரவு தெரிவித்ததாக செய்திகள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"இந்தி நடிகர் நவாசுதீன் சித்திக் போன்றவர் மணிகண்டன்" - இயக்குநர் பாலாஜி சக்திவேல்

Published on 17/05/2023 | Edited on 17/05/2023

 

balaji sakthivel speech at good night thanks meet

 

குட் நைட் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் வேளையில், ரசிகர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக ஒரு சந்திப்பினை படக்குழு ஏற்பாடு செய்திருந்தது. அதில் படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்து கொண்டனர். 

 

இயக்குநர் பாலாஜி சக்திவேல் பேசுகையில், ''இயக்குநர் என்னை சந்தித்து முழு திரைக்கதையை வாசிக்க கொடுத்தார். தாளில் எழுதிய திரைக்கதையை வெண் திரையில் காட்சி மொழிகளாகவும், பின்னணி இசை ஊடாகவும், ரசிகர்களுடன் எளிதாக தொடர்பு கொள்ளும் வகையிலும், படத்தை உருவாக்குவது தான் கடினம். இதனை இயக்குநர் விநாயக் எளிதாக கையாண்டிருக்கிறார். குறட்டை எனும் விசயத்தை பொழுது போக்கு அம்சங்களுடன் சொல்ல இயலும் என இளைஞர் பட்டாளம் விவரித்த கதையை நம்பி முதலீடு செய்து தயாரித்த தயாரிப்பாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

 

நாயகனான மணிகண்டன் மிக துல்லியமான நடிப்பை வழங்குபவர். படப்பிடிப்பு தளத்தில் அவரின் நடிப்பை கண்டு வியந்திருக்கிறேன். இந்தி திரை உலகில் நவாசுதீன் சித்திக் என்ற திறமையான கலைஞர் இருக்கிறார். அவரைப் போன்ற திறமையான நடிகர் தான் மணிகண்டன்" என்றார். 

 


 

Next Story

முன்னாள் மனைவியிடம் நஷ்டஈடு கேட்ட பேட்ட பட நடிகர்

Published on 28/03/2023 | Edited on 28/03/2023

 

nawazuddin. siddiqui ex wife issue

 

இந்தி சினிமாவில் காமெடி, வில்லன், ஹீரோ மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நவாசுதீன் சித்திக். தமிழில் ரஜினியின் 'பேட்ட' படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து இந்தியில் பல படங்களில் நடித்து வருகிறார். 

 

இதனிடையே தனது இரண்டாவது மனைவி ஜைனப் என்கிற அலியாவுக்கும் இவருக்கும் சமீபகாலமாகத் தொடர்ந்து பிரச்சனை எழுந்து வருகிறது. நவாசுதீன் சித்திக் அலியாவை 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், 2020 ஆம் ஆண்டு அலியா விவாகரத்து கேட்டு பின்பு அதைத் திரும்பப் பெற்றார். சில மாதங்களுக்கு முன்பு அலியா மீது நடிகரின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இருவருக்கும் சொத்து தகராறு எனக் கூறப்பட்டது. இதனிடையே நவாசுதீன் சித்திக் தன்னைத் தொடர்ந்து அடித்துத் துன்புறுத்தி வருவதாகக் கூறி அலியா புகார் அளித்தார். மேலும் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். பின்பு இரு தரப்பும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை வைத்தனர்.

 

இந்த விவகாரம் தொடர்பாக மௌனம் காத்து வந்த நவாசுதீன் சித்திக் சமீபத்தில் விளக்கமளித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், அலியா அதிக பணத்தை மட்டுமே விரும்புவதாகவும் பணம் கொடுத்தால் வழக்கைத் திரும்பப் பெற்றுவிடுவார் என்றும் அவர் மீது குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில் முன்னாள் மனைவி அலியா மற்றும் தனது தம்பி சம்சுதீன் சித்திக் மீது ரூ.100 கோடி நஷ்டஈடு கேட்டு மும்பை ஐகோர்ட்டில் நவாசுதீன் சித்திக் வழக்கு தொடர்ந்துள்ளார். 

 

அந்த மனுவில், சம்சுதீன் சித்திக்கை மேலாளராக நியமித்ததாகவும் அந்த பொறுப்பை பயன்படுத்தி அவர் தன்னிடம் மோசடியில் ஈடுபட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும் இந்த மோசடி தெரிந்து அவரிடம் கேட்டதனால், எனது முன்னாள் மனைவி அலியாவை எனக்கு எதிராக திருப்பி புகார் அளிக்க தூண்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை வருகிற 30 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. இதனிடையே அலியா, நவாசுதீன் சித்திக்குடன் விரைவில் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெறுவேன் என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.