/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/55_35.jpg)
'மாஸ்டர்' படத்தின் வெற்றி தந்த உற்சாகத்தில் உள்ள நடிகர் விஜய், அடுத்ததாக நெல்சன் திலீப்குமார் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். தற்காலிகமாக 'தளபதி 65' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். விரைவில் படப்பிடிப்பைத் தொடங்க திட்டமிட்டுள்ள நெல்சன் திலீப் குமார், படத்திற்கான முதற்கட்டப்பணிகளை முடுக்கிவிட்டுள்ளார்.
இந்த நிலையில், 'தளபதி 65' படத்தில் விஜய்க்கு வில்லனாக நவாஸுதீன் சித்திக் நடிக்க இருப்பதாகக்கடந்த சில நாட்களாகவே தகவல்கள் பரவி வருகின்றன. நவாஸுதீன் சித்திக் ஏற்கனவே 'பேட்ட' படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்துள்ளதால், இத்தகவல் உண்மையாக இருக்குமென்றே ரசிகர்கள் கருதிவந்தனர்.
சமீபத்தில்நவாஸுதீன் சித்திக் கலந்துகொண்ட நேர்காணலில்இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மறுப்பு தெரிவித்த நவாஸுதீன் சித்திக், 'தளபதி 65' படக்குழு தரப்பிலிருந்து இதுவரை யாரும் என்னை அணுகவில்லை என விளக்கமளித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)