/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/195_16.jpg)
ஜீ ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அக்ஷத் அஜய் சர்மா இயக்கத்தில் நவாசுதீன் சித்திக், அனுராக் காஷ்யப் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஹட்டி. ரோஹன் இசைப் பணிகளை கவனிக்கிறார். இப்படம் செப்டம்பர் 7 ஆம் தேதி ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
'ஹட்டி' தலைநகரம் முழுவதும் செயல்படும் அழுத்தமான குற்றப் பின்னணியை, குற்றவாளிகளின் உலகை அழுத்தமாகக் காட்சிப்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.
இப்படம் குறித்து அனுராக் காஷ்யப் கூறுகையில், “ஹட்டியை உருவாக்க அக்ஷத் மற்றும் அவர் குழு உழைத்த கடின உழைப்பைக் கண்டு, நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அக்ஷத் எனக்குப் பல வருடங்களாக உதவி இயக்குநராக உதவியிருக்கிறார். இயக்குநராக அவர் அறிமுகமான படத்திலேயே நடிகராக முன் வரிசையில் இடம் பெறும் அதிர்ஷ்டம் எனக்குக் கிடைத்துள்ளது” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)