navya nair hospitalized

Advertisment

மலையாள திரையுலகில் 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவர் நடிகை நவ்யா நாயர். மேலும் தமிழ் மற்றும் கன்னட மொழிகளிலும் நடித்துள்ளார். தமிழில் பிரசன்னாநடிப்பில் வெளியான 'அழகிய தீயே', சேரனின் 'மாயக்கண்ணாடி', முன்னாள் முதல்வர் கலைஞர் எழுதிய 'பாசக்கிளிகள்' உள்ளிட்ட சில படங்களில் நடித்து பிரபலமானார்.

இப்போது மலையாளத்தில் கடந்த 12ஆம் தேதி வெளியான படம் 'ஜானகி ஜானு' படத்தில் நடித்திருந்தார். இப்படத்திற்காக பல்வேறு பகுதிகளில் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து வருகிறார். அந்த வகையில் கேரளாவில் உள்ள சுல்தான் பத்தேரி பகுதியில் இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக சென்று கொண்டிருந்த போது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த நிகழ்ச்சிரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் கோழிக்கூட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நவ்யா நாயர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். விரைவில் அவர் குணமடைய அவரது நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றன.