Advertisment

புடவைகளை விற்று உதவி செய்த பிரபல நடிகை

navya nair helped charity people with his saree sold

மலையாள திரையுலகில் 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவர் நடிகை நவ்யா நாயர். மேலும் தமிழ் மற்றும் கன்னட மொழிகளிலும் நடித்துள்ளார். தமிழில் பிரசன்னா நடிப்பில் வெளியான 'அழகிய தீயே', சேரனின் 'மாயக்கண்ணாடி', முன்னாள் முதல்வர் கலைஞர் எழுதிய 'பாசக்கிளிகள்' உள்ளிட்ட சில படங்களில் நடித்து பிரபலமானார். இப்போது மலையாளத்தில் மற்றும் கன்னட மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

Advertisment

இந்த நிலையில் தனது சமூக வலைதளப்பக்கத்தில், தான் ஒரு முறை அணிந்த மற்றும் புதிதாக வாங்கி அணிய முடியாத புடவைகளை ஆன்லைனில் விற்பனை செய்வதாக அண்மையில் தெரிவித்திருந்தார். மேலும் கைத்தறி, காஞ்சிபுரம், பனாரஸ்உள்ளிட்ட பல்வேறு வகையான புடைவைகள் இருப்பதாகவும் நியாயமான விலையில் அவை கிடைக்குமெனவும் கூறியிருந்தார். இது விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டது. ரசிகர்கள் பல கேள்விகளை எழுப்பியிருந்தனர்.

Advertisment

navya nair helped charity people with his saree sold

இதையடுத்து நவ்யா நாயர் விற்பனையை தொடங்கினார். அதன் மூலம் கிடைத்த லாபத்தை கேரள பத்தனாபுரத்தில் உள்ள காந்திபவனுக்கு நன்கொடையாக கொடுத்துள்ளார். அங்கு வசிப்பவர்களுக்கு புதிய ஆடைகள் மற்றும் பயனுள்ள பொருட்களை வாங்கிக் கொடுத்து அருகில் இருக்கும் காந்தி பவன் சிறப்பு பள்ளிக்கு ரூ.1 லட்சம் நன்கொடையையும் கொடுத்துள்ளார். இவரது செயல் தற்போது பாராட்டை பெற்று வருகிறது.

Actress sarees sale
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe