Advertisment

ஆணவப் படுகொலைக்கு பழி தீர்க்கும் ‘நவயுக கண்ணகி’ - ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

navayuga kanneer first look poster released

‘நவயுக கண்ணகி’ என்ற தலைப்பில் மேடை நாடக கலைஞர்கள் மற்றும் புதுமுகங்கள் பவித்ரா தென்பாண்டியன், விமல் குமார், டென்சல் ஜார்ஜ், தென்பாண்டியன், ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ளது.இத்திரைப்படத்தை இயக்கி, தயாரித்து படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார் கிரண் துரைராஜ். இக்கதை பல உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

ad

தமிழ் சினிமாவில் பெரும்பாலும், மறைமுகமாகவும் நேரடியாகவும்சாதியை மையமாகக் கொண்டு பல திரைப்படங்கள் வந்திருந்தாலும் அவை பெரும்பாலும் ஒற்றைக் கருத்துடனும், ஒரு தரப்பினை பெருமை சொல்லியும் அல்லதுஅதற்கு மாறாக கருத்துகளையும் தெரிவித்த வண்ணமேஇருக்கிறது. ஆனால்இக்கதை சற்று வேறுபட்டு சாதியை ஆதரிப்பவர்கள், எதிர்ப்பவர்கள் மற்றும் அதன் கொடுமைகளைக் கண்டுகொள்ளாமல் இருப்பவர்கள், தெரியாதவர்கள், புரியாதவர்கள்என்று குழம்பி நிற்கும் சாமானிய மக்களின் கருத்தோட்டத்தை பிரதிபலிக்கும் விதமாக இருப்பதாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்த நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லூக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. டிசம்பரில் ‘ஷார்ட்பிளிக்ஸ்’ ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் குறித்து இயக்குநர் பேசுகையில், “அன்றுபாண்டிய மன்னனின் அர்த்தமற்ற தீர்ப்பில்கோவலனை இழந்த கண்ணகி, மதுரையை பழிதீர்க்க எரித்தாள். இன்றுஅர்த்தமற்ற ஆணவப் படுகொலையில் தனது காதலனை இழக்கிறார்சுவாதி. அவளை கட்டாயப்படுத்திதிருமணம் செய்து வைக்கிறார்கள். காதலனை இழந்த சுவாதி திருமணத்திற்குப் பின் பழிதீர்க்க நவயுக கண்ணகியாய் எடுக்கும் தொடக்கமே கதையின் கரு.

நான் படமெடுக்க இங்கே வந்த பின்பு சந்தித்த மனிதர்கள் பெரும்பாலானோர் நம்மிடம் பேசிப்பேசியே நம் ஜாதியைப் பற்றி தெரிந்துகொண்டு அதன்பிறகு நம்மைப் பற்றி அவர்களாகவே ஒரு கணிப்பை உருவாக்கிக் கொள்கிறார்கள். அதனால்தான் இந்த களத்தில் உள்ள ஒரு கதையை படமாக்க வேண்டும் என இந்த படத்தை துவங்கினேன். கதை பெங்களூருக்கு அருகிலேயே நடந்த, என்னை ரொம்பவே பாதித்த ஒரு சம்பவத்தை மையப்படுத்தி உருவாகி உள்ளது. இயக்குநர்கள் பா. ரஞ்சித், மோகன்.ஜி ஆகியோர் ஜாதியை பற்றி தங்களது கோணத்தில் வெவ்வேறு பாணியில் படம் எடுத்து வருகிறார்கள். நானும் இந்தப் படத்தை துவங்கியபோது ஒரு தரப்பினரின் சார்பாகத்தான் கதையை கொண்டு செல்ல வேண்டும் என நினைத்திருந்தேன். ஆனால் என்னுடைய சொந்த ஊருக்கு சென்றபோது நான் பார்த்து அனுபவத்தில் உணர்ந்த பல விஷயங்கள் எனது கருத்தை மாற்றிக்கொள்ள வைத்தன. அதனால் இதில் இருதரப்பினர் பற்றிய நியாயமான மற்றும் நியாயமற்ற விஷயங்களையும் சமமாக பேசியிருக்கிறேன். இந்த படத்தைப் பார்த்து முடிக்கும்போது ஜாதியை பற்றிய உங்களது கண்ணோட்டம் என்னவாக இருக்கும் என்பது ஒரு பார்வையாளராக உங்களுக்கே தெரிய வரும்” என்றார்.

Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe