Skip to main content

'நவரசா' படத்தின் டீசரை வெளியிட்டு ரிலீஸ் தேதியை அறிவித்த முன்னணி ஓடிடி நிறுவனம்!

Published on 09/07/2021 | Edited on 09/07/2021

 

Navarasa

 

கரோனா ஊரடங்கு காரணமாக கடும் நெருக்கடியைச் சந்தித்துள்ள திரைத்துறைக்கு நிதி திரட்டும் நோக்கோடு இயக்குநர் மணிரத்னம் 'நவரசா' என்ற படத்தை தயாரித்துள்ளார். ஆந்தாலஜி வகையில் உருவாகியுள்ள இப்படத்தை மணிரத்னத்துடன் இணைந்து ஜெயேந்திராவும் தயாரித்துள்ளார். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ், கௌதம் மேனன், பிரியதர்ஷன், கார்த்திக் நரேன் உட்பட 9 இயக்குநர்கள் இயக்க, சூர்யா, விஜய்சேதுபதி, அரவிந்த் சாமி, பாபி சிம்ஹா, சித்தார்த், பிரகாஷ் ராஜ், அதர்வா, ரம்யா நம்பீசன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

 

இப்படத்தின் ரிலீஸ் குறித்து மிகுந்த எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, ‘நவரசா’ திரைப்படம் ஆகஸ்ட் 6ஆம் தேதி நேரடியாக நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ளது. மேலும், ‘நவரசா’ படத்தின் டீசரையும் நெட்ஃபிளிக்ஸ் வெளியிட்டுள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்