Advertisment

'நவரசா' படத்தில் யார் யார்? எந்தெந்த படத்தில்..? லிஸ்ட் உள்ளே!

bfbfdsbdfsb

Advertisment

தமிழ்த் திரையுலகின் 40 முன்னணி நடிகர்கள், ஆளுமை மிக்க இயக்குநர்கள், மிகச்சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் இணைந்து பணியாற்றியிருக்கும் ‘நவரசா’ ஆந்தாலஜி திரைப்படம், நெட்ஃப்ளிக்ஸ்ஓடிடி தளத்தில் வரும் ஆகஸ்ட் 6ஆம் தேதியன்று 190 நாடுகளில் வெளியாகிறது. மனித உணர்வுகளான கோபம், கருணை, தைரியம், அருவருப்பு, பயம், நகைச்சுவை, காதல், அமைதி, ஆச்சர்யம் ஆகிய உணர்வுகளை மையமாக கொண்டு ஒன்பது பகுதிகளாக உருவாகியுள்ள இந்த ஆந்தாலஜி திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் கியூப் சினிமா டெக்னாலஜீஸ் இணைந்து தயாரித்துள்ளன. ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் ட்ரைலர், தற்போது வெளியாகி வைரலாகிவரும் நிலையில், இந்த ஆந்தாலஜி படத்தில் எந்தெந்த நடிகர்கள், யார் யார் படங்களில் நடித்துள்ளனர் என்ற விவரங்கள் அடங்கிய பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அதில்...

'நவரசா' பட தயாரிப்பாளர்கள்- மணிரத்னம், ஜெயேந்திரா பஞ்சாபகேசன்

ஆந்தாலஜி தலைப்பு 1 - ‘எதிரி’ (கருணை)

நடிகர்கள் - விஜய் சேதுபதி , பிரகாஷ் ராஜ், ரேவதி

இயக்குநர் - பெஜோய் நம்பியார்

ஆந்தாலஜி தலைப்பு 2 - ‘சம்மர் ஆஃப் 92’ (நகைச்சுவை)

நடிகர்கள் - யோகி பாபு, ரம்யா நம்பீசன், நெடுமுடி வேணு

இயக்குநர் - ப்ரியதர்ஷன்

ஆந்தாலஜி தலைப்பு 3 - ‘புராஜக்ட் அக்னி’ (ஆச்சர்யம்)

நடிகர்கள் - அர்விந்த் சுவாமி, பிரசன்னா, பூர்ணா

இயக்குநர் - கார்த்திக் நரேன்

ஆந்தாலஜி தலைப்பு 4 - ‘பாயாசம்’ (அருவருப்பு)

நடிகர்கள் - டெல்லி கணேஷ், ரோகிணி, அதிதி பாலன், செல்ஃபி கார்த்திக்

இயக்குநர் - வசந்த் எஸ். சாய்

ஆந்தாலஜி தலைப்பு 5 - ‘அமைதி’ (அமைதி)

நடிகர்கள் - பாபி சிம்ஹா, கௌதம் வாசுதேவ் மேனன், மாஸ்டர் தருண்

இயக்குநர் - கார்த்திக் சுப்புராஜ்

ஆந்தாலஜி தலைப்பு 6 - ‘ரௌத்திரம்’ (கோபம்)

நடிகர்கள் - ரித்விகா ஸ்ரீராம், அபிநய ஸ்ரீ, ரமேஷ் திலக், கீதா கைலாசம்

இயக்குநர் - அரவிந்த் சுவாமி

ஆந்தாலஜி தலைப்பு 7 - ‘இன்மை’ (பயம்)

நடிகர்கள் - சித்தார்த், பார்வதி திருவோத்து

இயக்குநர் - ரதீந்திரன் ஆர். பிரசாத்

ஆந்தாலஜி தலைப்பு 8 - ‘துணிந்த பின்’ (தைரியம்)

நடிகர்கள் - அதர்வா, அஞ்சலி, கிஷோர்

இயக்குநர் - சர்ஜூன்

ஆந்தாலஜி தலைப்பு 9 - ‘கிடார் கம்பியின் மேலே நின்று’ (காதல்)

நடிகர்கள் - சூர்யா, ப்ரயகா ரோஸ் மார்டின்

இயக்குநர் - கௌதம் வாசுதேவ் மேனன்

navarasa
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe