ஆர்டிஎஸ் சார்பில், தயாரிப்பாளர்கள் திருமால் லட்சுமணன், ஷியாமளா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சுப்ரமணியன் ரமேஷ் குமார் இயக்கத்தில், நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடித்துள்ள படம் ‘ரைட்’. இப்படம் வரும் செப்டம்பர் 26 ஆம் தேதி  திரைக்குவரவுள்ள நிலையில், படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள சென்னையில் நடைபெற்றது. 

Advertisment

இவ்விழாவில் படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் பிரத்தியேகமாக திரையிடப்பட்டது. இதில் நட்டி (எ) நட்ராஜ் பேசுகையில், “ரைட் ஒரு சுவாரஸ்யமான படம். ரமேஷ் என்னிடம் அஸிஸ்டெண்டாக இருந்தவர், அவர் கதை சொன்ன போதே யார்யாரெல்லாம் நடிக்க வேண்டும் என எழுதியே வைத்திருந்தார். அருண் பாண்டியன் சார் படத்தில் ஒரு கோ டைரக்டர் போல வேலை செய்தார். அவர் அர்ப்பணிப்பிற்கு நன்றி. அக்‌ஷரா ரெட்டி பாரம்பரியமான குடும்பத்தில் இருந்து வந்தவர், மிக கடுமையாக உழைத்துள்ளார், வாழ்த்துக்கள். 

யுவினா சிறப்பான நடிப்பை தந்துள்ளார். ஆதித்யாவும் சிறப்பாக செய்துள்ளார். ரோஷனுக்கு நல்ல எதிர்காலம் உண்டு. ரவிமரியா என் சிறந்த நண்பர் அவர் செய்த உதவிகள் ஏராளம் வந்து வாழ்த்தியதற்கு நன்றி. படத்தில் உழைத்த அனைத்து கலைஞர்களும் சிறப்பான உழைப்பைத் தந்துள்ளனர். குணா இசையில் வாழ்ந்துள்ளார். ஆர்ட் டைரக்டர் வேலை பெரியளவில் கண்டிப்பாக பேசப்படும். படத்தின் தயாரிப்பாளர்களுக்கு என் நன்றிகள். அனைவரும் இப்படத்தை தியேட்டரில் வந்து பார்க்க வேண்டும். சமூக அக்கறை மிக்க ஒரு விசயத்தை ரமேஷ் சொல்லியுள்ளார். அனைவரும் ஆதரவு தாருங்கள்” என்றார்.