natty, poonam bajwa starring gurumoorthy release date announced

ஃப்ரண்ட்ஸ் டாக்கீஸ் சார்பில் சிவசலபதி சாய்சரவணன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘குருமூர்த்தி’. நட்டி நடராஜ் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் பூனம் பஜ்வா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் நடிகர் ராம்கி, சஞ்சனா சிங், அஸ்மிதா உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இயக்குநர் கே.பி.தனசேகரன் இயக்கியுள்ள இப்படத்திற்கு சத்யதேவ் உதயசங்கர் இசையமைத்துள்ளார்.

Advertisment

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="394d2df2-3b0d-4c5d-a388-9c5a1a1a89b5" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/500x300_23.jpg" />

Advertisment

இந்த நிலையில் ‘குருமூர்த்தி’ படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. அதன்படி வருகிற 9ஆம் தேதி (09.12.2022) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்து ரிலீஸ் தேதியுடன் கூடிய போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. இப்படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் முன்னதாக வெளியான நிலையில் பாடல்கள் சமீபத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.