hdrhdsr

Advertisment

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் இந்தியாவில் உயர்ந்துகொண்டே வரும் நிலையில், கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு தொடர்ந்து ஊரடங்கை நீட்டித்து வருகிறது.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் திரையுலகமும் முடங்கியுள்ள நிலையில், நடிகர்கள் பலரும் பொதுமக்களுக்கு வீடியோக்கள், நேர்காணல் மற்றும் சமூகவலைத்தள பதிவுகள் மூலம் கரோனா விழிப்புணர்வைத் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி என்கிற நடராஜ் 'மீடூ' குறித்து சமூகவலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில்... ''மீடூ மாதிரி, ஜாதி டூ ன்னு கொண்டு வந்தாங்கன்னா.. எல்லா ஆண்மகன்களுக்கும் பின்னாடி ஒரு வெப் சீரீசேபண்ணலாம்... இது எல்லோருக்கும் பொருந்தும்னு நினைக்கிறேன்'' எனப் பதிவிட்டுள்ளார்.