Advertisment

“ஸ்போர்ட்ஸ் அரசியல் பேசியிருக்கிறார் ஆதி”- நட்பே துணை மக்கள் கருத்து

‘மீசையை முறுக்கு’ படத்தை தொடர்ந்து ஹிப்ஹாப் ஆதி கதாநாயகனாக நடிக்கும் இரண்டாவது படம் ‘நட்பே துணை’. இந்த படத்தில் யூ-ட்யூப் பிரபலம் விஜய் நடித்திருக்கிறார். மீசையை முறுக்கு படத்தில் நடித்த விக்னேஷ் காந்த், ஷாரா உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடித்திருக்கின்றனர். அறிமுக இயக்குனர் பார்த்திபன் தேசிங்கு படத்தை இயக்கியுள்ளார். கரு.பழனியப்பன் முதன் முறையாக வில்லனாக இப்படத்தில் நடித்திருக்கிறார். இன்று உலகம் முழுவதும் இப்படம் வெளியாகியுள்ளது.

Advertisment

public

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

காலை ஐந்து மணிக்கு போடப்பட்ட சிறப்பு காட்சியை பார்த்துவிட்டு வந்த ரசிகர்களில் பலரும் இந்த படத்தை பாராட்டியே பேசியிருந்தனர்.

முதலில் பேசிய ஒருவர்“ ஹிப்ஹாப் ஆதி செம, நல்ல நடிச்சிருக்கார்”என்றார்.

Advertisment

இரண்டாவதாக பேசியவர் “நல்ல ஒரு ஸ்போர்ட்ஸ் படம் எடுத்திருக்காங்க”என்றார்.

இவர்கள் இருவரும் பேசியதற்கு புதிதாக வேறு ஒரு விஷயத்தை தெரிவித்தார்,“படத்தில ஏன் ஓட்டுப்போடனும் எல்லாம் சொல்லியிருக்காங்க”என்றார்.

“படம் நல்ல மாஸா இருந்தது. நல்ல கமெர்ஷியல் எலிமெண்ட்ஸ் எல்லாம் வச்சு பக்கா பேக்கேஜா இருந்தது. படம் ரொம்ப ஜாலியா இருந்தது.” என்று ஒரு இளைஞர் கூறினார்.

“எப்படி ஒரு ஹாக்கி படம் எடுக்கப்போறாங்கனு எதிர்பார்த்தோம், நல்லவே ரெஸ்பான்ஸ் கிடைச்சது” என்று தெரிவித்தார்.

“படத்தில ஒரு ஒன்லைன் சொல்லியிருக்காங்க கூட்டமா இருக்கிறது பெருசு இல்ல, நம்மெல்லாம் ஒற்றுமையா இருக்கிறதுதான் பெருசுனு சொல்லியிருக்காங்க அதுக்காக பார்க்க வரலாம். மீசைய முறுக்கு கம்பேர் பண்ணும்போது இது ஓக்கேதான்” என்று ஆதியின் பழைய படத்தையும் இதையும் ஒப்பிட்டு பேசியிருந்தார்.

“வெளியூர் கட்சிகள உள்ளவிட மாட்ட்டோம். எங்கள் தன்மானத்த மீட்டெடுப்போம் அதை வர தேர்தல்ல பாப்பீங்க. இது அரசியல் பேசுற ஸ்போர்ட்ஸ் படம்” என்று இறுதியாக ஒருவர் கூறினார்.

vignesh kanth natpe thunai hiphop adhi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe