Advertisment

மோடி அழைப்பு ; பின்தொடர்ந்த விஜய் மக்கள் இயக்கம்

national flag raised in vijay makkal iyakkam office

இந்தியாவின் 75 வது சுதந்திர தின விழா வரும் 15 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில் பிரதமர் மோடி சமீபத்தில் 13 ஆம் தேதி முதல் 15 தேதி வரை வீடுகளில் தேசியக் கொடியை பறக்க விட வேண்டும் என்று மக்களுக்கு கோரிக்கை வைத்தார். அதோடு தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் தேசியக் கொடியை முகப்பு படமாக வைக்கவும்அறிவுறுத்தினார். அதன் படி அக்ஷய் குமார், மோகன்லால், மம்முட்டி, சுரேஷ் கோபி உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் பலரும் தங்களது சமூக வலைத்தள பக்கத்தின் முகப்பு படமாகத் தேசியக் கொடியை வைத்தனர்.

Advertisment

இதனிடையே ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தள பக்கத்தின் முகப்பு படத்தில் தேசிய கொடியை வைத்தார். மேலும்நேற்று தன் வீட்டிற்கு முன்பு தேசிய கோடியையும் பறக்கவிட்டார். இந்நிலையில் பனையூரில் உள்ள நடிகர் விஜய்யின், விஜய் மக்கள் இயக்கத்தின் அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisment

pm modi actor vijay
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe