bijoy mohanty

இந்திய சினிமாவில் தற்போது ஒடியா, மராத்தி, வடகிழக்கு இந்திய மொழி படங்களும் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்த வகையில் ஒடிய மொழி சினிமாவில் பிரபல நடிகராக இருந்த பி.கே. மோஹன்டி காலமானார். இவருக்கு வயது 70.

Advertisment

தேசிய விருது பெற்ற நடிகரான இவர், டெல்லியிலுள்ள டெல்லி ஸ்கூல் ஆஃப் ட்ராமாவில் நடிப்பு பயின்றுள்ளார். மேலும், நடிப்பு ஜாம்பவான்களான நசருதின் ஷா. ஓம் புரி உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து அங்கே நடிப்பு பயின்றுள்ளார்.

Advertisment

அண்மைக் காலமாக உடல்நலக் கோளாறால் அவதிப்பட்டுவந்துள்ள பி.ஜே. மோஹன்டி, நேற்று இரவு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஒடிசா முதலமைச்சார் சார்பில் வெளியான பதிவில், ''பி.ஜே. மோஹன்டியின் இழப்பு, ஒடியா சினிமாவில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அவருக்கான மரியாதைகளை அரசு இனிவரும் காலங்களில் செய்யும்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.