Advertisment

"அத்தனை மொழிகளிலும் மறக்க முடியாத எத்தனை நூறு படங்கள்" - சௌகார் ஜானகி குறித்து நாசர் நெகிழ்ச்சி!

Nasser praised Chaukar Janaki

பழம்பெரும் நடிகையானசௌகார்ஜானகி தமிழ்மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம், உள்ளிட்ட தென்னிந்தியமொழிபடங்களில் நடித்து பல்வேறு விருதுகளை வாங்கியுள்ளார்.50 வருடங்களுக்கு மேல் திரை துறையில் நடித்து வரும்சௌகார்ஜானகி தற்போது கூட சில படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவரதுகலைச்சேவையைபாராட்டி மத்திய அரசுசமீபத்தில் பத்ம ஸ்ரீ விருதை வழங்கியது. அதற்கு திரை பிரபலங்கள்ரசிகர்கள் என பலரும் தங்களின்வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Advertisment

இந்நிலையில் சௌகார் ஜானகிக்குபத்ம ஸ்ரீ விருது கிடைத்ததற்கு தமிழ் சினிமா நடிகர், நடிகைகள் சார்பாக வாழ்த்து தெரிவித்து நாசர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "ஓ எங்கள் ‘சவுக்கார்’ அம்மா.. அத்தனை மொழிகளிலும் மறக்க முடியாத எத்தனை நூறு படங்கள்! ஒவ்வொன்றும் முத்தாய்! ஒன்றில் கண்டது.. இன்னொன்றில் இல்லை. புதிது புதிதாய் கண்டு ரசிக்க கண்கோடி! ‘புதிய பறவையில்’ மிரட்டியதும் மிரண்டு போனதும் ஒரே ஜோடிக்கண்களா? ஆச்சர்யம்! கண்களை மிஞ்சும் உங்கள் முத்துசிரிப்பு! அச்சிரிப்பினும் வழிந்தோடும் உண்மையான உங்கள் அன்பும் பாசமும்!! தாங்கள் எங்களுக்கு தந்த கதாப்பாத்திரங்கள் ஒவ்வொன்றையும் முத்தாய் கோர்த்து அழகு பார்த்து மனமகிழ்ந்து விம்மிய எங்களுக்கு அம் முத்துமாலைக்கு பதக்கமாய் இன்று “பத்மஶ்ரீ” உங்களுக்கு கிடைத்திருப்பது எங்களுக்கு பெருமை. தமிழ் திரையுலகிற்கு கிடைத்த கொடை நீங்கள், என்றென்றும் நீடுடி வாழ நடிகர், நடிகைகள் சமூகம் சார்பில் வாழ்த்தி வணங்குகிறோம். “பத்மஶ்ரீ” விருது அறிவித்த ஒன்றிய அரசுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

Nassar padma shri sowcar janaki
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe