Advertisment

சம்பளத்தைக் குறைத்துக்கொண்ட நடிகர் 'நாசர்'..! தயாரிப்பாளர் மகிழ்ச்சி ட்வீட்!

vjvjk

Advertisment

உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் பல துறைகள் முடங்கியிருப்பதைப் போல சினிமா துறையும் முடங்கியுள்ளது. இதனால் திரையுலகில் கடும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இதைச் சரி செய்யும் வகையில் நடிகர் விஜய் ஆண்டனி மற்றும் ஹரிஷ் கல்யாண், இயக்குனர் ஹரி, நடிகர் உதயா, விஷ்ணு விஷால் மற்றும் இன்னும் சில திரை நட்சத்திரங்கள் தாங்களாக முன்வந்து சம்பளத்தைக் குறைத்துக் கொள்வதாக அறிவித்துள்ள நிலையில் 'கபடதாரி' படத்துக்காகத் தன் சம்பளத்தில் இருந்து 15% குறைத்துள்ளார் நடிகர் நாசர். இதுகுறித்து இப்படத் தயாரிப்பாளர் தனஞ்சயன் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்...

''நன்றி நாசர் சார் & கமீலா நாசர் மேம். எங்கள் 'கபடதாரி' படத்திற்கான நியாயமான சம்பளத்தை நாங்கள் உங்களுக்கு வழங்கியிருந்தாலும், அந்தச் சம்பளத்திலிருந்து 15% குறைக்க நீங்கள் ஒப்புக்கொண்டு டப்பிங் முடித்துக் கொடுத்து உள்ளீர்கள். எங்கள் படத்திற்கு நீங்கள் காட்டும் ஆதரவை நாங்கள் மனதார பாராட்டுகிறோம். உங்கள் குலம் பெருகட்டும்'' எனப் பதிவிட்டுள்ளார்.

Nassar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe