Nassar get injured at shooting spot

Advertisment

தமிழ் சினிமாவில் எல்லா கதாபாத்திரத்திற்கும் ஏற்றார் போல தன் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்துபவர்கள் வெகு சிலரே. அந்த வரிசையில் இன்று முக்கியமாக பார்க்கப்படும் நாசர் தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அதோடு இரண்டாவது முறையாக நடந்த நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்று தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.

இந்நிலையில் தெலுங்கில் நாசர் நடித்துவரும் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள தெலங்கானா போலீஸ் அகாடமியில் நடைபெற்று வந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக நாசருக்கு அடிபட்டு காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக நாசர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இந்த சம்பவம் படப்பிடிப்பு தளத்தில் சிறிது பரபரப்பை உண்டாக்கியது. பின்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாசர், சிகிச்சை பெற்று தற்போது நலமுடன் இருப்பதாக நாசரின் மனைவி கமீலா தெரிவித்துள்ளார்.

இதனிடையே நடிகை சுஹாசினி, மெஹ்ரீன், சியாஜி ஷிண்டே ஆகியோர் இப்படப்பிடிப்பில் கலந்துகொண்டனர். படப்பிடிப்பை முடித்துவிட்டு படிக்கட்டுகளில் இறங்கி வந்தபோது தவறி விழுந்து நாசருக்கு அடிபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.