Advertisment

நாசர் கொடுத்த விளக்கம்; நிம்மதி பெருமூச்சு விட்ட ரசிகர்கள்

nassar explined rumor

தமிழ் சினிமாவில் எல்லா கதாபாத்திரத்திற்கும் ஏற்றார் போல தன் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்துபவர்கள் வெகு சிலரே. அந்த வரிசையில் இன்று முக்கியமாக பார்க்கப்படுபவர் நாசர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 30 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இன்னும் பல படங்களில் நடித்து வரும் நாசர் திரைத்துறையில் இருந்து விலக போவதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியானது. இதனால் நாசரின்ரசிகர்கள் கலக்கத்தில் இருந்தனர்.

Advertisment

இந்நிலையில் நடிகர் நாசர் இது குறித்து விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “நான் ஒருபோதும் சினிமாவை விட்டு விலகமாட்டேன். என்னை பற்றி தவறான தகவல் வெளியாகியுள்ளது. நான் சினிமாவை விட்டு விலகுவதாக வெளியான செய்தி உண்மையில்லை. நான் ஏராளமானபடங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளேன். தமிழில் 3 படங்களில் நடிக்கிறேன். அதுமட்டுமில்லாமல் தெலுங்கிலும், இந்தியிலும் சில படங்களில் நடிக்க உள்ளேன். அத்துடன் ஒரு வெப் தொடரிலும்நடித்து வருகிறேன்" என்றார்.இதனைத்தொடர்ந்து நாசரின்ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

Advertisment

Nassar tamil cinema
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe