Advertisment

மனைவியுடன் ஸ்டாலினை நேரில் சந்தித்த நாசர்!

vagava

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெற்றுள்ளது. ஆட்சி அமைப்பதற்குத் தேவையான இடங்களைவிட அதிக இடங்களைத் திமுக கைப்பற்றியதையடுத்து, தனிப்பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்க உள்ளது. இதனையடுத்து, முதல்வராகப் பதவியேற்கவுள்ள மு.க.ஸ்டாலினுக்குபல்வேறு தரப்புகளில் இருந்து வாழ்த்துகள் குவிந்துவருகின்றன. அந்தவகையில்,நடிகர் நாசர் நேரில் சந்தித்து ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Advertisment

gvgsdgs

அதில்...

"வணக்கம்!

தமிழ்நாட்டின் அடுத்த முதல்வராக பதவி ஏற்க இருக்கும் திமுக தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை நானும் எனது மனைவி, தயாரிப்பாளர் கமீலா நாசரும் சந்தித்து வாழ்த்துகூறினோம். அப்போது, தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் தற்போதுள்ள சூழலையும், அதனால் பென்ஷன் பெறமுடியாமல் இந்தக் கரோனா காலத்தில் மிகுந்த கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் கலைஞர்களின் நிலைமையையும் எடுத்துக் கூறினேன். கண்டிப்பாக ஆவண செய்கிறேன் என்று கூறினார். அதற்கு அவருக்கு முதலில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், முதல்வராக பதவியேற்க இருக்கும் அவருக்கு, அனைத்து நடிகர், நடிகைகள் சமூகம் சார்பில் வாழ்த்துக்களையும், பாராடுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

Advertisment

நன்றி!

எம். நாசர்

அனைத்து நடிகர், நடிகைகள்சமூகம் சார்பில்" என குறிப்பிட்டுள்ளார்.

Nassar
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe