naseer

பாலிவுட்டின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவர் நசிருதீன் ஷா, இவர் நேற்று உடல்நலக் குறைவு காரணமாகமருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும்,. தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதாகவும்சமூக வலைத்தளங்களில் தகவல் பரவின.

Advertisment

முன்னதாக பாலிவுட் நடிகர்களான இர்பான் கான், ரிஷி கபூர் உள்ளிட்ட நடிகர்கள் மரணமடைந்ததை அடுத்து இப்படி ஒரு செய்தி வந்தவுடன் சினிமா ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினர்.

Advertisment

இதனையடுத்து நடிகர் நசிருதீன் ஷாதனதுபேஸ்புக் பக்கத்தில்,"என்னுடைய உடல்நலன் குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி. நான் ஊரடங்கைக் கடைப்பிடித்து நலமுடன் வீட்டில் இருக்கிறேன் என்பதை அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். தயவு செய்து வதந்திகளை நம்ப வேண்டாம்'என்று கூறியுள்ளார்.

மேலும் நசிருதீன் ஷாவின் மகன் விவான் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், "அப்பா நலமுடன் இருக்கிறார். அவரது உடல்நலம் குறித்து வரும் செய்திகள் போலியானவை. அவர் நலமுடன் இர்ஃபான் பாய் மற்றும் சிந்து ஜி (ரிஷி கபூர்) ஆகியோருக்காகப் பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறார். அவர்களது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். நம் அனைவருக்கும் இது மிகப்பெரிய இழப்பு" என்று குறிப்பிட்டுள்ளார்.