ஹரீஷ் சினிமாஸ் வழங்கும்,  தயாரிப்பாளர் அழகு பாண்டியன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சுபாரக் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘நறுவீ’. இப்படத்தில் டாக்டர் ஹரீஷ் நாயகனாக நடித்துள்ளார்.  இவருடன் வின்சு, வி.ஜே.பப்பு, பதினி குமார், ஜீவா ரவி, பிரவீணா, காதே, முருகானந்தம், பிரதீப், மதன் எஸ் ராஜா, ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். அஸ்வத் இசையமைத்துள்ள இப்படம் மலைவாழ் மக்களின் நலன்களை பேசியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisment

இத்திரைப்படம் சென்னை, ஊட்டி, குன்னூர் போன்ற இடங்களில் மொத்தம் 60 நாட்களில் படமாக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து வசதிகள் இல்லாத மலை கிராமங்களில் பெரும் சிரமத்துக்கு இடையே இரவு பகல் என இப்படத்தை படக்குழுவினர் உருவாக்கியுள்ளனர். இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், வரும் ஆகஸ்ட் 29ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழகமெங்கும் பாஸ்கர் சினிமா கம்பெனி மற்றும் ஷிவானி ஸ்டூடியோஸ் வெளியிடுகிறது.