style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9350773771" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
கன்னடத்தில் வாசு என்ற சூப்பர்ஹிட் படத்தை இயக்கிய அஜித் வாசன், தற்போது 'கண் இமைக்கும் நேரத்தில்' என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது. நள்ளிரவு ஒரு மணி முதல் நான்கு மணி வரை நடக்கும் சம்பவத்தை அடிப்படையாக வைத்து ஆக்ஷன் த்ரில்லராக படத்தை உருவாக்கி வருகிறார் இயக்குனர் அஜித் வாசன். புதுமுகங்கள் பலரும் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தை அஜித் வாசனுடன், நடிகர் நரேனும் இணைந்து தயாரிக்கிறார். சித்திரம் பேசுதடி, அஞ்சாதே ஆகிய படங்களில் நடித்து பிரபலமான நரேன் இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் கார்த்தி, மற்றும் நரேன் வெளியிட்டுள்ளனர். விரைவில் படத்தின் டீசரை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது