கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள 'கைதி' படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள நடிகர் நரேன் இப்படம் குறித்து நமக்கு அளித்த பிரித்தியேக பேட்டியில் பேசியபோது...

Advertisment

narain

''என் வாழ்க்கையில் எல்லா விஷயங்களுமே லேட்டாக தான் அமையும். எனக்கு அமையும் படங்களும் அப்படித்தான். நானாக இதை செய்ய மாட்டேன், அதை செய்யமாட்டேன் என்றெல்லாம் சொல்வதில்லை. வருகிற வாய்ப்புகளில் நான் தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். அதேபோல் வாய்ப்புகளும் லேட்டாகத்தான் வருகிறது. எனக்கு லேட்டாக படவாய்ப்பு கிடைப்பதை நினைத்து நான் வருத்தப்படுவதில்லை. இந்த படம் மட்டுமல்ல, எந்த படமாக இருந்தாலும், எப்போது வெளியானாலும், எப்போது வாய்ப்பு கிடைத்தாலும் அந்த படம் நன்றாக ஓடவேண்டும். அதுதான் முக்கியம். நான் இதை மட்டுமே எனக்கு ப்ரஷாராக நினைத்துக்கொள்வேன். அதை நோக்கி மட்டுமே என் பயணம் இருக்கும்.

'கைதி' பட வாய்ப்பு கார்த்தி மூலம் வந்தது. கதையும், என் கதாபாத்திரமும் நன்றாக இருந்ததால் நடிக்க ஒப்புக்கொண்டேன். என் கதாபாத்திரம் படம் ஆரம்பிப்பதற்கு முன்பே முழுவதுமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. அதனால் நான் இயக்குனர் என்ன சொல்கிறாரோ அதைமட்டும் செய்தாலே படத்திற்கு போதுமானதாக இருந்தது. படம் முழுவதும் இரவிலேயே நடப்பது மட்டுமே சற்று சவாலாக இருந்தது. இது நல்ல கண்டன்ட் உள்ள படம் என்பதால் விஜய் ரசிகர்களுக்கும் இந்த படம் மேல் கண்டிப்பாக சாஃப்ட் கார்னர் ஏற்படும். அவர்களும் இப்படத்தை விரும்பி பார்ப்பார்கள்.