naren athma first look released

தயாரிப்பாளர் நஜீப் காதிரி தயாரிப்பில், நடிகர் நரேன் நடிப்பில், ஹாரர் மிஸ்டரி திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் ஆத்மா. ராகேஷ் சங்கர் கதை, திரைக்கதை எழுத, இயக்குநர் சுகீத் இப்படத்தினை இயக்கியுள்ளார்.நாயகியாக தில்லுக்கு துட்டு 2 புகழ் ஷ்ரத்தா ஷிவதாஸ் நடித்துள்ளார். பால சரவணன் காளி வெங்கட், கனிகா, விஜய் ஜானி ஆகியோர் முக்கியவேடங்களில் நடிக்க, ஃபிலிப்பினோவைச் சேர்ந்த நடிகைகள் ஷெரீஸ் ஷீன் அகாட், கிறிஷ்டீன் பெண்டிசிகோ ஆகியோர் திருப்புமுனை பாத்திரங்களில் நடித்துள்ளனர்.கே சந்துரு இப்படத்திற்கு வசனம் எழுதியுள்ளார்.

Advertisment

இந்த நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைசுசீந்திரன் வெளியிட்டுள்ளார். துபாயில் முழுக்க முழுக்க படமாக்கப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படம் என படக்குழு தெரிவித்துள்ளது. முழு படப்பிடிப்பும் முடிந்த நிலையில், படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் டீசர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் வெளியாகும்.

Advertisment