narain shared about lokesh new plan about lcu

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் லியோ படத்தை தொடர்ந்து ரஜினியின் 171வது படத்தை இயக்க கமிட்டாகியுள்ளார். அதற்கான கதை எழுதும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும், அடுத்த ஆண்டு ஏப்ரலில் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஸ்டண்ட் மாஸ்டர்களாக அன்பரிவ் இணைந்துள்ளனர். இதனிடையே‘ஜி-ஸ்குவாட்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். உறியடி விஜய்குமார் நடித்த ‘ஃபைட் கிளப்’ படத்தை தன்னுடைய நிறுவனம் சார்பில் வெளியிடுகிறார். இப்படம் வருகிற 15ஆம் தேதி வெளியாகவுள்ளதால் அதன் ப்ரோமோஷன் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

Advertisment

லோகேஷ் கனகராஜ், தனது படங்களில் கைதி படத்தின் கதையை விக்ரம் படத்துடன் தொடர்புப்படுத்தி இயக்கியிருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்ற நிலையில் அதற்கு லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் என ரசிகர்கள் அழைத்து வந்தனர். இதன் தொடர்ச்சியாக கடைசியாக அவர் இயக்கிய லியோ படத்திலும் கத்தி படத்தில் வந்த போலீஸ் கதாபாத்திரத்தை தொடர்பு படுத்தியிருந்தார்.

Advertisment

இதையடுத்து ரஜினியைவைத்து அவர் இயக்கும் படம் லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் பாணியில் வராது என ஒரு நேர்காணலில் கூறியிருந்தார். இப்படத்தை முடித்துவிட்டு கைதி இரண்டாம் பாகம் எடுக்கவுள்ளதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்த நிலையில் அதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் கைதி 2 தொடங்குவதற்கு முன்பாக ஒரு குறும்படம் இயக்க திட்டமிட்டுள்ளதாக நரேன் தெரிவித்துள்ளார்.

மலையாளத்தில் நரேன், மீரா ஜாஸ்மீன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் குயின் எலிசபத். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதனால் ப்ரொமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ள அவர் ஒரு நிகழ்ச்சியில் லோகேஷ் கனகராஜ் 10 நிமிட குறும்படம் இயக்கவுள்ளதாகவும் அவரோடு இணைந்து தானும் பணியாற்றவுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் அது தான் லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ்கான ஆரம்ப கதையாக இருக்கும் எனத்தெரிவித்துள்ளார்.

Advertisment