/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/220_31.jpg)
தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் கவனம் செலுத்தி வரும் நரேன், கடைசியாக தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆரின் தேவரா படத்தில் நடித்திருந்தார். தமிழில் ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான இறைவன் படத்தில் நடித்திருந்தார். இப்போது விஜய் - வினோத் கூட்டணியில் உருவாகி வரும் விஜய்யின் 69வது படத்தில் நடித்து வருகிறார். மேலும் கைதி 2 படத்தை கைவசம் வைத்துள்ளார்.
இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவரது அடுத்தடுத்த படங்கள் குறித்தான கேள்விக்கு, “தளபதி 69 பட படப்பிடிப்பு நல்ல படியாக நடந்து கொண்டு வருகிறது. கைதி 2 படப்பிடிப்பு அடுத்த வருஷம்தான்” என்றார்.
அவரிடம் விஜய் சினிமாவை விட்டு விலகுவது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அதை யோசிக்கும் போது எனக்கு கஷ்டமாக இருக்கிறது. அவர் அரசியலில் ஜெயிக்க எனது வாழ்த்துக்கள். நமக்கெல்லாம் ரொம்ப பிடித்த நடிகர் இன்னொரு விஷயத்தில் சாதிக்க வேண்டும் என ஆசைப்படுகிறார். அவருக்கு என்னுடைய சப்போர்ட் இருக்கும்” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)