/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/97_10.jpg)
'துருவங்கள் 16' படத்தைத் தொடர்ந்து, கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவான படம் 'நரகாசூரன்'. அரவிந்த் சாமி, ஸ்ரேயா சரண், சந்தீப் கிஷன், ஆத்மிகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தை கெளதம் மேனன், கார்த்திக் நரேன், பத்ரி கஸ்தூரி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தின் பணிகள் முன்னரே நிறைவடைந்தும் பைனான்ஸ் பிரச்சனை காரணமாக ரிலீஸ் செய்யப்படாமலேயே இருந்தது.
இதையடுத்து, பிற படங்களை இயக்கும் பணிகளில் இயக்குநர் கார்த்திக் நரேன் கவனம் செலுத்தத் தொடங்கினர். கடைசியாக அவர் இயக்கத்தில் வெளியான மாஃபியா திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தற்போது நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் 'டி 43' படத்தை இயக்கிவருகிறார். இந்த நிலையில், நரகாசூரன் படத்தின் ரிலீஸ் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, நரகாசூரன் திரைப்படம் சோனி லைவ் என்ற ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில் இறுதிமுடிவு எட்டப்பட்டுவிட்டதாகவும் விரைவில் இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)