napoleon son about his marriage regards negative comments

தமிழில் பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர் நெப்போலியன். நடிப்பதை தாண்டி அரசியலிலும் ஈடுபட்டு வந்தார். திமுக சார்பில் போட்டியிட்டு தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும் மத்திய இணையமைச்சராகவும் இருந்தார். பின்னர் பாஜகவில் இனைந்து செயல் பட்டு வந்தார். இப்போது அமெரிக்காவில் தனது குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில் மூத்த தனுஷ் சிறுவயதிலே தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப்பட்டியைச் சேர்ந்த அக்ஷயாவுடன் கடந்த சில மாதங்களுக்கு முன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதையடுத்து அடுத்த மாதம் திருமணம் நடக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisment

இந்த நிலையில் நெப்போலியனின் மூத்த மகன் தனுஷ், தனது திருமணத்துக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். மேலும் சிலர் நெகட்டிவாக பேசுவதாக சொல்லி அது எனக்கு மோட்டிவேஷ்னலாக இருப்பதாக கூறியுள்ளார். அவர் வெளியிட்ட வீடியோவில் அவர் பேசியதாவது, “எல்லாருமே என் கல்யாணத்துக்கு வாழ்த்து தெரிவிச்சு போஸ்ட் போட்டிருந்தீங்க. நன்றி. அதே சமயம் சில பேர் நெகட்டிவாகவும் கமெண்ட் செஞ்சிருந்தீங்க. அது என்ன பெரிசா பாதிக்கல.

Advertisment

அது எனக்கு மோட்டிவெஷ்னலா இருக்கு. உங்க கிட்ட ஜெயிச்சு காமிக்கனும்னு இருக்கேன். அதனால் ப்ரூப் பண்ணிட்டு உங்ககிட்ட வந்து பேசுறேன். என்னை மாதிரி இருக்குறவங்களால எதுவும் பண்ண முடியும் அல்லது முடியாது என நிறைய பேர் சொல்வாங்க. அதை நீங்க கேட்காதீங்க. விடாமல் ட்ரை பண்ணுங்க. எதை வேணாலும் சாதிக்கலாம்” என்றார். இவரது வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.