Advertisment

வீடு புகுந்து தாக்கப்பட்ட நாஞ்சில் விஜயன்! 

nanjil vijayan

விஜய் டிவியில் வரும் நிகழ்ச்சிகளுள் ஒன்று ‘அது இது எது’. அந்த நிகழ்ச்சியில் ஒரு பகுதி ‘சிரிச்சா போச்சு’. இதில் கலந்துகொள்ளும் பல காமெடி நடிகர்களுள் ஒருவர் நாஞ்சில் விஜயன். பெண் வேடமிட்டு காமெடி செய்வதில் பிரபலம். இவர் சமீபத்தில் நடிகை வனிதாவின் மூன்றாவது திருமணம் குறித்து சர்ச்சையான கருத்துகளை வெளியிட்டு வந்தார்.

Advertisment

இவருடன் சேர்ந்து சூர்யா தேவி என்ற பெண்ணும் வனிதாவை அவதூறாகபேசி, பின்னர் வனிதாவால் வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீஸாரால் கைது செய்யப்பட்டார் இந்த சூர்யா தேவி. இந்நிலையில் அந்த சர்ச்சைகள் ஓய்ந்த நிலையில் புது பிரச்சனை உருவாகியுள்ளது.

Advertisment

நாஞ்சில் விஜயன் வசித்து வரும் வீட்டிற்கு ரவுடிகளை அனுப்பி தாக்கியுள்ளதாக நாஞ்சில் விஜயன் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரவுடிகள் தாக்கிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை தொடர்ந்து சூர்யா தேவி மீது நாஞ்சில் விஜயன் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார்.

kollywood
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe