Nanjil Sampath Speech at Parole Movie Press Meet

Advertisment

இயக்குநர் துவாரக் ராஜா இயக்கத்தில், மதுசூதனன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'பரோல்'. கேங்ஸ்டர் ஆக்சன் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் கார்த்திக், லிங்கா, கல்பிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இப்படம் வருகிற 11ஆம் தேதி வெளியாகவுள்ளது. இது தொடர்பாகப் பத்திரிகையாளர்களைச் சந்தித்தது படக்குழு.

அப்போது நடிகர் கார்த்திக் பேசுகையில், "இந்தப் படம் ஒரு தாய்க்கும்அவரது இரு மகன்களுக்கும் இடையிலான கதை. வட சென்னையைப் பற்றிய கதைகள் எப்பொழுதும் தீவிரமான மற்றும் அழுத்தமானபடைப்பாக இருக்கும். அதுபோலவே இந்தப் படத்தின் உள்ளடக்கம் அனைவரையும் ஈர்க்கக் கூடிய ஒன்றாக இருக்கும்" என்றார்.

பேச்சாளர் நாஞ்சில் சம்பத் பேசுகையில், "மிகவும் நுணுக்கமான கதையை அடையாளம் கண்டு, அதில் திரைக்கதை அமைத்து இருக்கிறார் இயக்குநர். இந்தக் கதையில் அம்மாவிற்கும் மகனுக்குமான பாசத்தை அழகான திரைக்கதையாக வடிவமைத்து இருக்கிறார். வித்தியாசமான சிந்தனைகள் கொண்ட ஆட்கள் எப்பொழுதும் வெற்றி பெறுவார்கள். அந்த வகையில் இந்தப் படமும், இந்தப் படக்குழுவும் கண்டிப்பாக வெற்றி பெறும்" என்றார்.

Advertisment

இயக்குநர் துவாரக் ராஜா கூறுகையில், "இந்தப் படம் ஒரு குடும்பத்தைப் பற்றிய கதை. குடும்பங்களில் நாம் பார்க்காத ஒரு பக்கத்தைப் பற்றிய கதை இது. இந்தப் படத்தின் கதைக்களத்தில் ஆண்களால் ஏற்படும் பிரச்சனையை, பெண்கள் தீர்ப்பதாய் இருக்கும். இந்தப் படத்தில் நடித்த பெண் கதாபாத்திரங்கள் அனைவரும் அந்த உணர்வுகளைச் சிறப்பாகக் கடத்தியுள்ளனர். இந்தப் படத்திற்கு உங்களது ஆதரவு தேவை" என்றார்.