nanjil sampath

‘கனா’ படத்தை தயாரித்ததை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன், அடுத்து பிளாக் ஷீப் என்ற யூ-ட்யூப் டீம் உருவாக்கும் திரைப்படத்தை தயாரிக்கிறார். இந்த திரைப்படத்தை கார்த்திக் வேனுகோபால் இயக்க, சீரியல் நட்சத்திரம் ரியோ கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

நேற்று இந்த படம் பூஜை போட்டு துவங்கப்பட்டது. அப்போது படத்தின் தயாரிப்பளரான சிவகார்த்திகேயன் பட பூஜையில் கலந்துகொண்டார். மேலும் இந்த பூஜையில் பிளாக் ஷீப் டீமை தவிர பிரபல அரசியல் பேச்சாளரான நாஞ்சில் சம்பத்தும் பங்கேற்றிருந்தார். இதனை தொடர்ந்துதான் இப்படத்தில் நாஞ்சில் சம்பத்தும் நடிக்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக தெரிய வந்தது.

Advertisment

முன்னதாகநாஞ்சில் சம்பத் அரசியலைவிட்டு வெளியேறியுள்ளார். அதன் பின்னர், எல்.கே.ஜி என்ற அரசியல் நகைச்சுவை படத்தில் ஆர்.ஜே. பாலாஜியுடன் நடித்து வருகிறார். தற்போது சிவகார்த்திகேயன் தயாரிப்பில் நடிக்கும் இவருக்கு இது இரண்டாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.