nani

Advertisment

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நானி நடிப்பில் உருவாகியுள்ள படம் வி. இந்த படம் நானியின் நடிப்பில் வெளியாகும் 25 வது படமாகும்.

அதனால் மிகவும் விளம்பரப்படுத்தி பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட இப்படம், கரோனா அச்சுறுத்தலால் தள்ளிப்போனது. தற்போது ஓடிடியில் நேரடியாக ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மோகன் கிருஷ்ணா இயக்கத்தில் நானி, சுதீர் பாபு, நிவேதா தாமஸ், அதிதி ராவ், ஜகபதி பாபு, வெண்ணிலா கிஷோர், நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வி'.

Advertisment

இந்த படத்தின் டீஸர் மூலம் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. ஏனென்றால், 'வி' படத்தில் நானி முதன்முறையாக வில்லனாக நடித்துள்ளார். பலமுறை ஓடிடி வெளியீடு குறித்த தகவல் வெளியானபோது படக்குழு மறுப்பு தெரிவித்தது. ஆனால், தற்போது அமேசான் ப்ரைம் நிறுவனம் பெரும் தொகைக்கு இப்படத்தை வாங்கியிருப்பதாக தெரிகிறது. பலரும் இந்த அறிவிப்பால் வியப்பில் இருக்கின்றனர்.