தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்துவருகிறார். நடிகர் விஜய்யின் 65வது படமான இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன.
இது ஒருபுறமிருக்க, மற்றொருபுறம் விஜய்யின் அடுத்த படமான 'தளபதி 66' படத்திற்கான ஆரம்பக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. இப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்க, ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த ஞாயிறன்று (26.09.2021) வெளியிடப்பட்ட நிலையில், இப்படத்தில் வில்லனாக நடிக்கவுள்ளநடிகர் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, 'தளபதி 66' படத்தில் விஜய்க்கு வில்லனாக நானி நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இவர், ராஜமௌலி இயக்கத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான ‘நான்ஈ’ படத்தில் நாயகனாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.