/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/nani-sam.jpg)
நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்துவருகிறார். இவர் தமிழில் 'மெர்சல்', 'கத்தி', 'தெறி', 'இரும்புத்திரை' உள்ளிட்ட பல படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார். தமிழைப் போலவே தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களைக் கொடுத்துள்ளார். சமீபத்தில் கணவர் நாக சைதன்யாவைசமந்தா விவாகரத்து செய்தார். இது திரையுலகினர் மத்தியில் பெரிதும் பேசப்பட்டது. இருப்பினும் தொடர்ந்து பல படங்களில் நடிக்க சமந்தா ஒப்பந்தமாகிவருகிறார்.
அந்த வகையில், பிரபல தெலுங்கு நடிகர் நானிநடிக்கும் 'தசரா' படத்தில் நடிக்க சமந்தா ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், நானிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார். இயக்குநர்ஸ்ரீகாந்த் ஓடிலா இயக்கும் இப்படத்தின் மோஷன் போஸ்டர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் 'தசரா' படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்குசமந்தாவிடம் நடந்த பேச்சுவார்த்தையில் இறுதி முடிவுஎட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2012ஆம் ஆண்டு இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான 'நான் ஈ' படத்தில் நானி - சமந்தா இருவரும் இணைந்து நடித்திருந்ததுகுறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)