ரஜினியுடன் நடிக்கும் முன்னணி ஹீரோ

nani is acting in rajini 170th film

ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் 'ஜெயிலர்' படத்தில் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் மலையாளம் மற்றும் கன்னடத்தில் முன்னணி நடிகர்களாக இருக்கும் சிவராஜ் குமார், மோகன்லால் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில், இந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இதையடுத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் 'லால் சலாம்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் நடிக்க ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். லைகா தயாரிக்கும் இப்படம் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி வரும் நிலையில், முன்னாள் இந்திய கேப்டன் கபில் தேவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இப்படத்தைத் தொடர்ந்து தனது 170வது படமாக 'ஜெய் பீம்' பட இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் ரஜினி. லைகா தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் 2024 ஆம் ஆண்டுக்குள் வெளியாகவுள்ளது. இப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாவதாகவும் போலீஸ் கதாபாத்திரத்தில் ரஜினி நடிப்பதாகவும் கூறப்பட்டது. சமீபத்தில் விக்ரமிடம் வில்லனாக நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகத் தகவல் வெளியான நிலையில் பின்பு அவர் மறுத்துவிட்டதாகப் பேசப்பட்டது.

இதையடுத்து பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளதாகத்தகவல் வெளியானது. இந்நிலையில் மேலும் ஒரு முன்னணி நடிகர் இணையவுள்ளாராம். தெலுங்கு நடிகர் நானிஇப்படத்தில் கேமியோ ரோலில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகத்திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நானி, கடைசியாக தெலுங்கில் தசரா படத்தில் நடித்திருந்தார். இப்போது அவரது 30வது படமான 'ஹாய் நானா' (Hi Nanna) படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வருகிற டிசம்பர் 21 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

actor nani Actor Rajinikanth TJ Gnanavel
இதையும் படியுங்கள்
Subscribe