Advertisment

"உடலை அசைக்கக் கூட முடியாது" - அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட நந்திதா

nandita swetha affected by rare disease

'அட்டகத்தி' படம் மூலம் தமிழுக்கு அறிமுகமான நந்திதா ஸ்வேதா, தொடர்ந்து ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, முண்டாசுப்பட்டி, நெஞ்சம் மறப்பதில்லை உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். கடைசியாக சசிகுமார் நடிப்பில் வெளியான, 'எம்ஜிஆர் மகன்' படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். கன்னடத்தில் தனது திரைப்பயணத்தை தொடங்கிய நந்திதா தமிழைத்தாண்டி தெலுங்கிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இன்று வெளியாகியுள்ள 'ஹிடிம்பா' என்ற படத்தில் நடித்துள்ள நிலையில் அதன் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்.

Advertisment

அந்த வகையில் ஒரு நிகழ்ச்சியில், தனது சொந்த வாழ்க்கை குறித்து பகிர்ந்துள்ளார். அதில், அறிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகத்தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "20 முதல் 55 வயதுக்குட்பட்ட பெண்களின் மக்கள் தொகையில் சுமார் 2 சதவீதத்தை பாதிக்கும் பைப்ரோமியால்ஜியா என்ற தசை கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளேன். ஒரு சிறிய வேலை செய்தால் கூட அது என் தசைகளில் பிரச்சனை ஏற்படுத்தும். இது சோர்வு மற்றும் நினைவாற்றல் குறைபாட்டை உருவாக்கும். உடலை அசைப்பதற்குக் கூட கடினமாக இருக்கும். இதையெல்லாம் தாண்டி தான் ஹிடிம்பா படத்திற்காக உடல் எடையைக் குறைத்துள்ளேன்" என்றார்.

Advertisment

nandita swetha
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe