Skip to main content

"அவர் இருந்ததால் செட் எப்போதும் ஜாலியாக இருக்கும்" -  நந்திதா ஸ்வேதா

Published on 19/01/2021 | Edited on 19/01/2021
fvsagasf

 

கிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் ஜி.தனஞ்செயன், லலிதா தனஞ்செயன் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘கபடதாரி’. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தை பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். ஜி.தனஞ்செயன், ஜான் மகேந்திரன், ஹேமந்த் ராவ் ஆகியோர் திரைக்கதை எழுதியுள்ள இப்படத்திற்கு ராசாமதி ஒளிப்பதிவு செய்துள்ளார். சைமன் கே.கிங் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் சிபிராஜ், நந்திதா ஸ்வேதா, ஜெயப்பிரகாஷ், எஸ்.சதீஷ்குமார், தயாரிப்பாளர் டி.சிவா, நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி உள்ளிட்ட பலர்  சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார்கள். அப்போது விழாவில் நடிகை நந்திதா ஸ்வேதா பேசியபோது.... 

 

"எனக்கு முன்பு பேசிய அனைவரும் அனைத்தும் சொல்லிவிட்டார்கள். நான் பொதுவாக நடிக்க கூடிய கதாப்பாத்திரங்களில் நடிக்க தான் விரும்புவேன். அப்படி ஒரு கதாப்பாத்திரம் தான் இந்த கதாப்பாத்திரம். தனஞ்செயன் சார் பற்றி அனைவரும் சொல்வது உண்மை தான். அவரைப்போன்ற தயாரிப்பாளரை நான் பார்த்ததில்லை. அவர் ரொம்ப சுறுசுறுப்பாக இருப்பதோடு, திரைக்கதையிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்வார். இப்படி ஒரு தயாரிப்பாளர் சினிமா இண்டஸ்ட்ரிக்கும் முக்கியம். இந்த படத்தை நான் கன்னடத்தில் பார்த்துவிட்டேன். ரொம்ப சிறப்பான படம். இயக்குநர் பிரதீப்பிடம் எமோஷ்னல் காட்சிகளில் எப்படி நடிக்க வேண்டும், என்பதை கற்றுக்கொண்டேன். இந்த படத்தின் மூலம் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். படத்தில் எனக்கும் சிபிக்கும் இருக்கும் கெமிஸ்ட்ரியை விட ஜெயப்பிரகாஷ் சாருக்கும், எனக்கும் இடையே தான் நல்ல கெமிஸ்ட்ரி. அவருடன் நான் நிறைய படங்களில் நடித்திருக்கிறேன். எனக்கு அப்பாவாக அவர் பல படங்களில் நடித்திருக்கிறார். அந்த பந்தம் இப்போதும் தொடர்கிறது. அவரை நான் அப்பா என்று தான் அழைப்பேன். தமிழ் மற்றும் தெலுங்கில் நடித்ததும் புது அனுபவமாக இருந்தது. சிபி ஜாலியான மனிதர். சீரியசான படமாக இருந்தாலும் சிபி இருந்ததால் செட் எப்போதும் ஜாலியாக இருக்கும். எனக்கு இந்த பட வாய்ப்பு கொடுத்ததற்கு லலிதா மேடமுக்கு நன்றி. படத்தின் இசையும் சிறப்பாக வந்திருக்கிறது. இசையமைப்பாளருக்கு என் வாழ்த்துகள்” என்றார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

"உடலை அசைக்கக் கூட முடியாது" - அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட நந்திதா

Published on 20/07/2023 | Edited on 20/07/2023

 

nandita swetha affected by rare disease

 

'அட்டகத்தி' படம் மூலம் தமிழுக்கு அறிமுகமான நந்திதா ஸ்வேதா, தொடர்ந்து ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, முண்டாசுப்பட்டி, நெஞ்சம் மறப்பதில்லை உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். கடைசியாக சசிகுமார் நடிப்பில் வெளியான, 'எம்ஜிஆர் மகன்' படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். கன்னடத்தில் தனது திரைப்பயணத்தை தொடங்கிய நந்திதா தமிழைத் தாண்டி தெலுங்கிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இன்று வெளியாகியுள்ள 'ஹிடிம்பா' என்ற படத்தில் நடித்துள்ள நிலையில் அதன் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். 

 

அந்த வகையில் ஒரு நிகழ்ச்சியில், தனது சொந்த வாழ்க்கை குறித்து பகிர்ந்துள்ளார். அதில், அறிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "20 முதல் 55 வயதுக்குட்பட்ட பெண்களின் மக்கள் தொகையில் சுமார் 2 சதவீதத்தை பாதிக்கும் பைப்ரோமியால்ஜியா என்ற தசை கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளேன். ஒரு சிறிய வேலை செய்தால் கூட அது என் தசைகளில் பிரச்சனை ஏற்படுத்தும். இது சோர்வு மற்றும் நினைவாற்றல் குறைபாட்டை உருவாக்கும். உடலை அசைப்பதற்குக் கூட கடினமாக இருக்கும். இதையெல்லாம் தாண்டி தான் ஹிடிம்பா படத்திற்காக உடல் எடையைக் குறைத்துள்ளேன்" என்றார். 
 

 

 

Next Story

நடிகை நந்திதா சுவேதாவிற்கு கரோனா அறிகுறி! 

Published on 26/04/2021 | Edited on 26/04/2021

 

Nandita Swetha

 

கடந்த 2019ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவின் ஊகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ், கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியாவில் வேகமெடுக்கத் தொடங்கியது. அரசு விதித்த ஊரடங்கு உட்பட பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தொடர்ந்து, கரோனா பரவல் ஓரளவிற்குக் கட்டுக்குள் வந்தது. தற்போது உலக நாடுகள் முழுவதிலும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ள கரோனா இரண்டாம் அலை, கடந்த சில வாரங்களாக இந்தியாவிலும் பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

 

இந்த நிலையில், நடிகை நந்திதா சுவேதாவிற்கு கரோனா தொற்று அறிகுறிகள் தென்பட்டுள்ளன. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "எனக்கு கரோனா அறிகுறிகள் உள்ளன. என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டேன். கவனமாக இருந்து உங்கள் உடல்நலத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.