Published on 07/03/2019 | Edited on 07/03/2019

நந்திதா ஸ்வேதா முதன் முறையாக ஆக்சன் கதாநாயகியாக இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடிக்கும் படம் 'IPC 376'. முழுக்க முழுக்க ஆக்ஷன் நிரம்பியிருக்கும் படமாக உருவாகும் இப்படத்திற்கு ஆக்ஷன் கோரியோகிராஃபி செய்து, முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவும் செய்துள்ளார் சூப்பர் சுப்பராயன். மேலும் த்ரில்லர், சஸ்பென்ஸ், இன்வெஸ்டிகேஷன், காமெடி எல்லாம் கலந்த கமர்ஷியல் கதையாகவும் இப்படத்தை உருவாக்குகிறார் அறிமுக இயக்குனர் ராம்குமார் சுப்பாராமன். பவர் கிங் ஸ்டுடியோஸ் சார்பில் எஸ்.பிரபாகர் தயாரிக்கும் இப்படம் ஒரே நேரத்தில் தமிழ் தெலுங்கில் தயாராகும் பைலிங்குவல் படமாக உருவாகும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியாகியுள்ளது.