நந்திதா ஸ்வேதா நடிப்பில் 'ஐபிசி 376' என்ற ஆக்‌ஷன், ஹாரர் கலந்த மாஸ் கமர்சியல் படம் உருவாகி வருகிறது. இதில் அவர் ஆக்சன் போலீசாக நடித்து வருகிறார். ஆக்‌ஷன் காட்சிகள் அதிகமாக உள்ள இப்படத்தில் பெரும்பாலும் டூப் இல்லாமலே துணிச்சலாக நடித்துள்ளார் நந்திதா ஸ்வேதா.

Advertisment

nandita

xcZX

மேலும் சண்டைக்காட்சிகளில் நந்திதா ஸ்வேதாவுக்கு ரத்தக்காயம் ஏற்பட்ட போதும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் சிரத்தை எடுத்து ஒத்துழைப்பு கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகவுள்ளது. ராம்குமார் சுப்பாராமன் இயக்கத்தில் உருவாகும் இப்படம் இப்படம் பெண்களைப் போற்றும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் தலைப்பில் உள்ள 'ஐபிசி 376' என்பது பெண்கள் மீதான பாலியல் கொடுமைக்கு எதிரான சட்டத்தைக் குறிக்கிறது. பவர்கிங் ஸ்டுடியோ சார்பாக எஸ்.பிரபாகர் தயாரித்து வரும் இப்படம் தமிழ் தெலுங்கு என இருமொழிகளில் தயாராகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஏற்காடு ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளது. தற்போது படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மிக வேகமாக நடைபெற்று வருகிறது.