
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் சிம்பு, வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் மாநாடு படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். பல தடைகளைக்கு பின் ஷூட்டிங் தொடங்கப்பட்ட நிலையில் கரோனா அச்சுறுத்தலால் மீண்டும் ஷூட்டிங் தடைப்பட்டது.
தற்போது தமிழக அரசு சினிமா ஷூட்டிங்கிற்கு அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து நவம்பர் மாத தொடக்கத்தில் மாநாடு படத்தின் ஷூட்டிங் தொடங்கப்படும் என்று தயாரிப்பாளர் அறிவித்தார்.
இதனிடையே இருக்கும் ஒரு மாத இடைவேளையில் சூசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்க திட்டமிட்டு, ஷூட்டிங் திண்டுக்கல்லில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் மோஷன் போஸ்டர் 26ஆம் தேதி மதியம் 12:12 மணிக்கு வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
இந்த படத்திற்கு திரு ஒளிப்பதிவு செய்ய, நிதி அகர்வால் ஹீரோயினாக நடிக்கின்றார். மேலும், சிம்புவின் தங்கையாக பிரபல நடிகர் நந்திதா நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.