Published on 17/08/2018 | Edited on 19/08/2018

நடிகை நந்திதா நடிப்பில் 'அசுரவதம்' படம் சமீபத்தில் வெளியாகி, இதில் நந்திதாவின் பாத்திரம் நல்ல பெயர் பெற்றது. இவர் தற்போது 'நர்மதா' என்ற படத்தில் நடித்து வருகிறார். பாலாவின் உதவியாளர் கீதா ராஜ்புத் இயக்கும் இப்படத்தில் நந்திதா பள்ளி மாணவி, கர்ப்பிணி, ஒரு குழந்தைக்கு தாய் என மூன்று விதமான தோற்றத்தில் நடிக்கிறார். ஒரு பள்ளி மாணவி கர்ப்பமாகி அந்தக் குழந்தையை பெற்றெடுத்து வளர்க்க போராடுகிற கதையாக இப்படம் உருவாகிறது. மேலும் இதில் விஜய் வசந்த் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். நந்திதா முதல்முறையாக நாயகியை மையப்படுத்திய கதையில் நடிப்பதால் இந்தப் படம் அவருக்கு இன்னொரு பரிமாணத்தை கொடுக்கும் எதிர்பார்க்கப்படுகிறது.