mr.chandramouli

kiran arya

தேசிய விருது பெற்ற நடன இயக்குனர் தினேஷ் கதாநாயகனாக நடித்து அனைத்து தரப்பு ரசிகர்களாலும் பாராட்டப்பட்டு மாபெரும் வெற்றிபெற்ற 'ஒரு குப்பைக் கதை' படத்தில் வில்லனாக நடித்தவர் நடிகர் கிரண்ஆர்யா. நந்தினி சீரியல் மூலம் அறிமுகமான கிரண் ஆர்யா தன் சினிமா அனுபவம் குறித்து பேசும்போது.... "நான் தகடு என்ற தமிழ் படத்தில் கதாநாயகனாக அறிமுகமானேன். பிறகு பாலுமகேந்திரா ஐயா அவரது கூத்துப் பட்டறையில் நடிப்பு பயின்று வந்தேன் அப்போது பார்த்த இயக்குனர் காளி ரங்கசாமி என்னை 'ஒரு குப்பைக் கதை' படத்தில் வில்லன் காதபாத்திரத்தில் நடிக்க வைத்தார். படத்தில் என்னை நம்பி பெரிய கதாபாத்திரம் கொடுத்தார். அந்த நம்பிக்கையை நான் காப்பாற்றி விட்டேன் என்று படம் வந்த பிறகு தெரிந்து கொண்டேன். ஒரு 'குப்பைக்கதை' படத்திற்கு பிறகு சுந்தர்.சியின் அவுனி மூவீஸ் தயாரிப்பில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் நந்தினி சீரியலில் நடிக்க ராஜ்கபூர் சார் எனக்கு வாய்ப்பு கொடுத்தார் அந்த நன்றியை நான் எப்போதும் மறக்கமாட்டேன்.

Advertisment

style="display:inline-block;"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9546799378">

'ஒரு குப்பைக் கதை' என் சினிமா வாழ்கையில் பெரிய திருப்புமுணை. அதற்காக எனக்கு வாய்பளித்த படத்தின் தயாரிப்பாளர் அஸ்லாம் மட்டும் இயக்குனர் காளிரங்கசாமி ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இப்போது இயக்குனர் சுந்தர்.சி தயாரிப்பில் ஹிப் ஹாப் ஆதி நடிக்கும் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறேன். மற்றும் பெயர் சூட்டப்படாத இரண்டு படங்களிலும் நடித்துக்கொண்டிருக்கிறேன்" என்றார்.

Advertisment