Advertisment

நட்புக்கு முக்கியத்துவம்; ரைட்ஸ் வாங்கி பயன்படுத்திய ஏ.ஆர்.ரகுமான் பாடல்! 

 nanban oruvan vantha piragu press meet 

Advertisment

புதுமுக இயக்குநர் ஆனந்த் இயக்கிய தமிழ்த் திரைப்படம் ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’. படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் அனந்த் ராம், பவானி ஸ்ரீ ஆகியோர் நடித்துள்ளனர். ஏ.எச்.காஷிப் இசையமைத்துள்ளார். இப்படம் விரைவில் திரையரங்கில் வெளியாக உள்ளது. இப்படக்குழுவினர் சமீபத்தில் பத்திரிகையாளர்களைசந்தித்தனர்.

அப்போது பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு சுவாரசியமான பதிலளித்தனர். இந்தப் படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த முஸ்தபா பாடலை பயன்படுத்தியிருக்கிறீர்களே அதற்கு முறையாக ரைட்ஸ் வாங்கியிருக்கிறீர்களா? ஏன்னா இளையராஜா இப்பெல்லாம் ரைட்ஸ் கேட்கிறாரே அதற்காகத்தான் கேட்கிறோம் என்ற கேள்வியை முன் வைத்தனர்.

அதற்கு படக்குழுவினர், “முறையாக இசையமைப்பாளரை அணுகினோம். இந்தப் படத்தில் பயன்படுத்திய பாடல் அலை ஓசை ரெக்காட்ஸ் என்கிறவர்களிடம் இருந்தது. அவர்களிடமிருந்து ரைட்ஸ் வாங்கித்தான் பயன்படுத்தியுள்ளோம்” என்றனர். மேலும், இப்படத்தின் முக்கியமான இரண்டு பாடலை தனுஷ் மற்றும் ஜி.வி.பிரகாஷ் பாடியுள்ளனர் என்றார்கள்.

ilayaraaja ar rahman
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe