ஐஸ்வர்யா. எம் மற்றும் சுதா.ஆர் ஆகியோர் தயாரிப்பில் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’. இயக்குநர்ஆனந்த், ‘மீசையமுறுக்கு’ படம் மூலம் பிரபலமான நிலையில், இப்படத்தின் மூலம் முதல் முறையாக இயக்கி ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தில் லீலா, குமரவேல், விசாலினி, ஐஸ்வர்யா எம், அனந்த், பவானி ஸ்ரீ, ஆர்ஜே விஜய் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ளனர். காஷிஃப் என்பவர் இசைப் பணிகளை மேற்கொண்டுள்ளார். வெங்கட் பிரபு இப்படத்தை வழங்குகிறார்.
இப்படத்தின் முதல் பாடலான ‘பக்கோடா’ பாடல் சமீபத்தில் வெளியானது. இதை தொடர்ந்து தற்போது ‘ஆழாதே’ பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. இப்பாடலை தனுஷ் பாடியுள்ளார். மேலும் காஷிஃப், சாம் விஷால், ஹர்ஷா வர்தன் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். ஆர்.ஜே. விஜய் வரிகள் எழுதியுள்ளார். மெலோடி பாடலாக அமைந்துள்ள இப்பாடல் ஹீரோ ஹீரோயினுக்கும் இடையே உள்ள காதலை விவரிக்கும் வகையில் அமைந்துள்ளது.