Nana Patekar smacks a fan who tries taking selfie

Advertisment

இந்தி மற்றும் மராத்தியில் பல்வேறு படங்களில் நடித்துப் பிரபலமானவர் நானா படேகர். கடைசியாக தி வேக்ஸின் வார் படத்தில் நடித்திருந்தார். தமிழில் ரஜினியின் காலா படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இப்போது ஜேர்னி (Journey) என்ற தலைப்பில் ஒரு படம் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், நானா படேகர் ஒரு சிறுவனை அடிக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், வாரனாசியில் உள்ள தெருவில்ஜேர்னி படத்தின் படப்பிடிப்பிற்காக அவரது கதாபாத்திர கெட்டப்புடன் நின்று கொண்டிருக்கிறார். அப்போது ஒரு சிறுவன் அவரிடன் செல்ஃபி எடுக்க முயல்கிறான். உடனே அச்சிறுவனை பின் தலையில் அடித்து விடுகிறார். நானா படேகரின் இந்த செயலுக்கு சமூக வலைத்தளங்களில் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.