Advertisment

'200 பேர் இருக்கும்போது அதெப்படி சாத்தியம்' - தனுஸ்ரீதத்தா பாலியல் புகாருக்கு நானா படேகர் பதில் 

nana patekar

விஷாலின் ‘தீராத விளையாட்டு பிள்ளை’ படத்தில் கதாநாயகியாக நடித்த தனுஸ்ரீ தத்தா சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் 'கடந்த 2008ஆம் ஆண்டு 'ஹார்ன் ஓகே ப்ளீஸ்' என்ற படத்தில் நடித்தபோது நானா படேகர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அதை வெளியே சொல்லக்கூடாது என்று அவரது ஆதரவாளர்கள் தன்னை மிரட்டி, குடும்பத்தினருடன் சென்றபோது தங்களை தாக்கியதாக குற்றம் சாட்டியிருந்தார். நடிகை தனுஸ்ரீ தத்தா கூறிய இந்த பாலியல் புகாருக்கு பல்வேறு பாலிவுட் நடசத்திரங்கள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் காலா படத்தில் வில்லனாக நடித்த நானா படேகர் இந்த புகாருக்கு தற்போது பதில் அளித்துள்ளார். அதில்....

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

"என் மீது தனுஸ்ரீதத்தா கூறியுள்ள பாலியல் குற்றச்சாட்டுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. பாலியல் பலாத்காரம் என்பதற்கு அர்த்தம் என்ன..? படப்பிடிப்பில் நாங்கள் இருவரும் உட்கார்ந்து இருந்தோம். எங்களை சுற்றி 200 பேர் அமர்ந்து இருந்தார்கள். இதில் எப்படி பாலியல் பிரச்சினை ஏற்பட்டது. அவர் வழக்கு தொடர்ந்தால் சட்டப்படி சந்திப்பேன். யார் என்ன பேசினாலும் எனக்கு கவலை இல்லை. என் வேலையை நான் செய்து கொண்டிருக்கிறேன். அதை தொடர்ந்து செய்வேன்" என்றார்.

tanushree dutta
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe