Published on 26/03/2020 | Edited on 26/03/2020
கரோனா பயம் உச்சகட்டத்தில் இருக்கின்ற நிலையில் இதுதொடர்பாக நடிகை நமீதா வீடியோ மூலம் மக்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதில், "எல்லோருக்கும் வணக்கம். நான் உங்கள் நமீதா பேசுகிறேன். இப்ப நான் ரொம்ப முக்கியமான வேலை ஒன்றைச் செய்யப்போறேன். தெரு நாய்களுக்குத் தண்ணீர் வைக்கப் போறேன். அதுங்களும் உயிர்கள் தானே.

அவர்களுக்கும் நல்லா பசிக்கும், தாகம் எடுக்கும். நான் இப்போ தண்ணீர் தவிர கொஞ்சம் சாப்பாடும் வைக்கப் போறேன். 21 நாள் கஷ்டம் நமக்கு மட்டும் கிடையாது, அவர்களுக்கும்தான். எனவே முடிந்த அளவு அவர்களுக்கு நாம உதவியாக இருப்போம். நம்மால் ஆன உணவு தண்ணீரை அவர்களுக்கு மறக்காமல் கொடுக்க வேண்டும். தேங்க் யூ" என்று கோரிக்கை விடுத்துள்ளார்.