/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/194_23.jpg)
தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான அளவிற்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் நடிகை நமீதா துரைப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் சிக்கித்தவித்தார். அவரை தி.மு.க வட்டச் செயலாளர் ஏ.கே. ஆனந்த்தலைமையில் சென்ற தன்னார்வலர்கள் மீட்புப் பணிக்குழு பத்திரமாக மீட்டனர். அவரோடு சேர்த்து அப்பகுதியில் சுற்றியுள்ள 200க்கும் மேற்பட்டோர் 8 படகுகளில் மீட்கப்பட்டுள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)